ராமநாதபுரத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை தமிழக காவல்துறை இன்று காலை கைது செய்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள வெள்ளையபுரம் கிராமத்தில் பிறந்தவர் மோடி பரணி இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார் தேசிய சிந்தனையில் ஆர்வம் கொண்டவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் அந்த வகையில் மோடி பரணி என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நான் அகற்றி விடுவேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் இதனால் ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிகாலை தமிழக காவல்துறை கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .