Posts

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு

 பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான பசல் பீமா யோஜனா திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது விவசாயிகளின் நலன் கருதி தொடர்ந்து மழை மற்றும் பண்டிகை கால விடுமுறையால் விவசாயிகள் சில பேர் பதிவு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுஇதுவரை பதிவு செய்யாத நபர்கள்   வருகிற 22 ஆம் தேதி வரை  பதிவு செய்து கொள்ளலாம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது  இதனால் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் .

கட்டுமாவடி பத்ரகாளியம்மன் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கிய பாஜக பிரமுகர் லண்டன் ராமசாமி

 புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி ஏனாதி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு   பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை வழங்கிய  மக்கள் செல்வர் லண்டன் திரு கே வி ராமசாமி அவர்களுக்கு அப்பகுதி மக்கள்  மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.  லண்டன் கே வி ராமசாமி அவர்கள்   சார்பாக இந்த விழாவில் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன் ஒன்றிய துணைத் தலைவர் திரு செல்லமுத்து  திரு சிவபாலன் ஜ வெள்ளாட்டு மங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்  கட்டுமாவடி காளிமுத்து  கட்டுமாவடி கடற்கரை கிளை தலைவர் திரு கருப்பையா  ஆன்மீக பிரிவை சார்ந்த திரு முரளி  அவர்கள் திரு கலைவாணன் அவர்கள் விவசாய அணி மாவட்ட செயலாளர் திரு முருகையன்  மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மணமேல்குடி அருகே எனது மண், எனது தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்

 மணமேல்குடி அருகே எனது மண், எனது தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பெருமருதூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு நேரு யுவ கேந்திரா மற்றும் இந்திய அஞ்சல் துறை நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பாரதப் பிரதமரின் ஆணைக்கிணங்க எனது மண் எனது தேசம் அமுதப் பெருவிழா யாத்திரை பேரணியாக நடைபெற்றது டெல்லியில் அமைய உள்ள சுதந்திரப் போராட்ட நினைவிடத்திற்கு மணமேல்குடி ஒன்றியம்  பல்வேறு ஊராட்சிகளில் இருந்து புனித மண் கொண்டுவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில்  யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஜோயல் பிரபாகர் நேரு யுவகேந்திரா முன்னாள்  நிர்வாகி சிவபாலன் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவல்லி முத்துக்குமார் துணை தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார் ஆசிரியர் குமார்  அறந்தாங்கி  தேசிய இளையோர் தொண்டர் மணிமேகலை ஒன்றிய தபால் துறை அலுவலர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இறுதியாக மணமேல்குடி தேசிய இளையோர் தொண்டர் வசந்தகுமார் நன்றி உரையாற்றினார் முன்னதாக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தேசிய இளையோர் தொண்டர் கலைச்செல்...

வெள்ளூர் பஞ்சாயத்தில் ஒன்றிய போச்சுடா பழனியப்பன் தலைமையில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி

 புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடி ஒன்றியம் வடக்கு வெள்ளூர் பஞ்சாயத்தில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது  நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உபகர சாமி நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு நாராயணன் பட்டாச்சாரியார் மற்றும்  பொதுமக்கள் ஆர்வமோடு  கலந்து கொண்டனர் 

மணமேல்குடி அருகே காரக்கோட்டை ஊராட்சி பானாவயல் கிராமத்தில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது

 இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத்துக்கு உட்பட்ட மணமேல்குடி ஊராட்சியில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி காரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பானா வயல்  கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில்  பெண்கள் ஆர்வமாடு கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் சக்தி கேந்திர பொறுப்பாளர் V.திருநாவுக்கரசு அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் பவர் பாண்டியன் பாஜக நிர்வாகி சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

பாரத பிரதமரின் சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 *11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்* பாரத பிரதமரின் சிறு  விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குறு, சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ (பிஎம் கிசான்) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தது. இதன்படி, பயிர் சாகுபடி செய்வதற்கான நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். வருமான வரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்எல்ஏக்கள், மேயர்கள் உள்ளிட்டோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும், இதில் பயன்பெற முடியாது. தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணையாக இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகள் பயனடைந...

ராமநாதபுரத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை தமிழக காவல்துறை இன்று காலை கைது செய்தது

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள வெள்ளையபுரம் கிராமத்தில் பிறந்தவர் மோடி பரணி இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார் தேசிய சிந்தனையில் ஆர்வம் கொண்டவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழக விளையாட்டு   துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் அந்த வகையில் மோடி பரணி என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நான் அகற்றி விடுவேன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் இதனால் ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிகாலை தமிழக காவல்துறை கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .