பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு பயன்பெற வேண்டும்

 பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பி எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு பயன்பெற வேண்டும் 


சுய சார்பு இந்தியாவை நோக்கி பயணிக்கும் நம் அரசாங்கம் சென்ற வருடம் பாரத பிரதமர் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை அறிவித்தார்

பாரத தேசம் முழுவதும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான 27,360 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்த பி எம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசினுடைய பங்கு 18,128 கோடி என குறிப்பிட்டுள்ளது.

முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் மேம்படுத்தும் திட்டம் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் தரம் உயர்த்தும் திட்டம் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக  விளங்கும்.

பாரத தேசம் முழுவதும்  14,500 பள்ளிகள் இந்த திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன

இந்த திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கின் மூலம் வரவு வைக்கப்படும் .

எந்தவித இடைத்தரகர்கள் இல்லாமல் பள்ளியின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி வழங்கப்படுகிறது .

நிதியில் 40 சதவீதத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையிலான குழுக்கள் முடிவு செய்யலாம்.

பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றுதல் சூரிய சக்தியின் மூலமாக எல்இடி விளக்கு கொண்ட வசதி பாரதப் பிரதமரின் போஷன் அபியான் சத்துப் பொருட்கள் கொண்ட தோட்டம் தண்ணீர் சேகரிப்பு குழந்தைகள் கல்வியின் மீதான கவனம் தற்சார்பு விவசாயம் 

இதுபோன்ற செயல்படுத்தினால் மாணவர்களுடைய கல்வி தரம் மேம்படும் 

மன உளைச்சல் இல்லாமல் மாணவர்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்தியும் புத்தக சுமையை குறைத்து அதிகமாக செய்முறை வகுப்புகளை நடத்துவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்கிறது 

தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுகின்றபடி அதிகமான செய்முறை வகுப்புகள் முழுமையான கல்வியை பின்பற்றுதல்  பொம்மைகள் மூலம் விளையாட்டு கல்வி ஆசிரியரிடம் மாணவர் கேள்வி கேட்கும் முறை இருக்கும் அதிகமாக இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றன .

ஆகவே தமிழ்நாடு அரசாங்கம் இந்த திட்டத்தை ஆதரித்து மத்திய அரசு உடன் இணைந்து இதில் பயன்பெற்று கிராமப்புற ஏழை மாணவர்களுடைய வாழ்வாதாரத்தில் மேம்பட வேண்டும்.

    


               சிவபாலன்

  வலது சாரி சிந்தனையாளர்

Comments

Popular posts from this blog

மணமேல்குடி அருகே காரக்கோட்டை ஊராட்சி பானாவயல் கிராமத்தில் கூடுவோம் கூட்டுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது

மணமேல்குடி அருகே எனது மண், எனது தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்

கட்டுமாவடி பத்ரகாளியம்மன் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கிய பாஜக பிரமுகர் லண்டன் ராமசாமி